பெண் மீது சூடான எண்ணெயை ஊற்றிய எலக்ட்ரீசியன் கைது

0
69

ஓசூர்: பிப், 4
ஓசூர் அடுத்த கலுகொண்டப்பள்ளியில், சிகரெட்டிற்கு பணம் கேட்ட பெண் மீது, சூடான எண்ணெயை ஊற்றிய எலெக்ட்ரீசியன், கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராயப்பா மனைவி கிருஷ்ணவேணி, 48; இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் போண்டா கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த, 1 இரவு, 8:00 மணிக்கு, இவரது கடைக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன் மஞ்சுநாத், 41, சிகரெட் வாங்கினார். அதற்கு பணம் தருமாறு கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், அவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கடையில் அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருந்த சூடான எண்ணையை எடுத்து, கிருஷ்ணவேணி மீது ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணவேணி, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மத்திகிரி போலீசார், மஞ்சுநாத்தை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here