பெங்களூரில் தொடரும் மழை

0
45

பெங்களூரு, அக். 12-
பெங்களூருவில் நேற்று மாலை 5 மணி முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கர்நாடகத்தில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து தலைநகரமாம் பெங்களூருவிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை மாலை 5 மணிக்கு தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக சாந்திநகர், சிவாஜிநகர் ராஜாஜிநகர், மல்லேஸ்வரம் ஜாலஹள்ளி ஹெப்பாள் பிடிஎம்லே-அவுட் மெஜஸ்டிக், காந்திநகர் மடிவாளா, மகாலட்சுமி லே-அவுட் கோரமங்களா, வில்சன் கார்டன் பசஸேவராநகர் எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் கல்லூரிகள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாயினர். பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களும் மாலை வேளையில் பெங்களூருவில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here