பெங்களூரில் இடி கன மழை

0
96

பெங்களூரு, ஏப். 21-
பெங்களூரில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்தது.
பெங்களூரில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரில் இருந்து வந்த கனலாக கொதித்து வந்த வெயில் கொடுமை தற்போதைக்கு மிகவும் குறைந்து குளுமையுடன் உள்ளது.

இந்த நிலையில் நேற்று பெங்களூரில் மாலை சுமார் 5.30 மணிக்கு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சில பகுதிகளில் கனமழையாகவும் சில பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்து அவற்றை குடியிருப்போர் வெளியேற்றினர்.

மாலை வேளையில் பெய்த இந்த மழை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
மேலும் இது தொடர்பாக மாநில வானிலை மைய இயக்குனர் சுந்தர் எம்.மெட்ரி கூறியதாவது பெங்களூரில் நேற்று சில பகுதிகளில் 0.6 மில்லி மீட்டர் அளவில் சில பகுதிகளில் 0.4 மில்லி மீட்டர் அளவிலும் மழை பெய்து பதிவாகியுள்ளது. மேலும் பெங்களூரில் காலையில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்த நிலையில் மாலையில் 23.9 டிகிரி செல்சியில் மாலையில் 23.9 டிகிரி செல்சியசாக குறைந்தது.

இந்த நிலையில் பெங்களூரில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனத்த மழையும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here