புகையிலைபொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

0
38

ஓசூர், ஆகஸ்ட், 4
ஓசூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த, தகவலை தொடர்ந்து, தீவிர சோதனை நடத்த எஸ்.பி., மகேஸ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, ஓசூரில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, நரசிம்மா காலனியை சேர்ந்த வில்சன் 48, எம்.ஜி. சாலையை சேர்ந்த சுரேஷ், 40, அலசநத்தம் பகுதியை சேர்ந்த ரமேஷ், 40, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here