பி.டி.ஓ.ஆபிஸ் முன்பு சி.பி.எம்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0
56

ஓசூர்,மே24.
தளி பி.டி.ஓ.ஆபிஸ் முன்பு சி.பி.எம்.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி
பி.டி.ஓ.ஆபீஸ் முன்பு 100நாட்கள் வேலை திட்டத்தில் நிலுவைத்தொகை வழங்ககோரி மார்க்சிஸ்ட்கம்யூணிஸ்ட்(சி.பி.எம்.) கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு ஜனநாயக மாதர்சங்க தேன்கனிக்கோட்டை வட்டசெயலாளர் நாகரத்தினா தலைமை தாங்கினார்.சி.பி.எம்.மாவட்ட செயலாளர் சேகர் வட்ட செயலாளர் இருதயராஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக அகிலஇந்திய ஜனநாயக மாதர்சங்க செயலாளர் சங்கரி சிறப்புரை ஆற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க
வேண்டும்.100நாள் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை.மாதக்கணக்கில் கூலி வழங்காமல் தளி பி.டி.ஓ.ஆபீஸ் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகிறார்கள். இதனால் கூலிவேலைக்கு செல்லும் ஏழை பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே அதிகாரிகள் கூலியை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதையடுத்து கோரிக்கை மனுக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பி.டி.ஓ.ஆபீஸ் அலுவலக மேலாளர் பாபுவிடம் வழங்கினர்.இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி தளி எஸ்.ஐ.குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ரூடவ்டுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here