பிச்சை எடுத்த நடிகருக்கு உதவி

0
331

பரத்-சந்தியா நடித்த ‘காதல்’ படத்தில் நடித்தவர் விருச்சககாந்த். இவர், தாய்- தந்தை மரணத்துக்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டார். சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அவரை நடிகர் சாய் தீனா, இயக்குனர் மோகன் ஆகியோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். நடிகர் அபி சரவணன், ‘ஓவியா’ பட தயாரிப்பார் காண்டீபன் ஆகியோர் உடைகள், புதுசெல்போன் வாங்கி கொடுத்தனர்.

சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட விழாவின் போது அபி சரவணன் ஒரு காசோலையை விருச்சகாந்துக்கு வழங்கினார். மன்சூர் அலிகான் அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பெங்களூரை சேர்ந்த கிரிஷ், விருச்சககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதாக கூறினார்.

விருச்சககாந்த் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் இப்படி இருப்பதை புரிந்து கொண்டனர். இதையடுத்து, அவரை தீனா, மோகன் ஆகியோர் ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் குணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here