பாலியல் தொல்லை போலீஸ்காரர் கைது

0
81

தும்கூர், ஜூலை 30-
தாய் மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரரை கைது செய்துள்ள சம்பவம் தும்கூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தும்கூர் போலீஸ் சூப்ரிடெண்ட் திவ்யா கோபிநாத் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில்-
தும்கூர் மாவட்ட ஜெய்நகர் போலீஸ் நிலையத்தில் ஹெட்கான்ஸ் டேபிளாக பணியாற்றி வந்த மோகன்குமார் கடந்த ஓராண்டாக சிறுமி மீது பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இவன் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பில் உல்லாசமும் அனுபவித்துள்ளார்.

அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு செல்வதும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தும் உறவை வலுவாக்கிக் கொண்டார்.
அந்த பெண் திருமணமானவர் கணவனை விட்டு பிரிந்து ஆறு ஆண்டுகளாக தனியார் இருப்பதை அறிந்தே உதவி செய்வது போல் புகுந்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். தாயுடன் தொடர்பில் இருந்த இந்த போலீஸ்காரன் அந்த பெண்ணின் மகளையும் விட்டு வைக்கவில்லை இதனால் பெரும் குழப்பமும் தகராறும் ஏற்பட்டிருக்கிறது. மோகன்குமார் வீட்டிலும் அவரின் மனைவிக்கும் இந்த இழிவான செயல்பாடு தெரியவந்ததால் தகராறு முற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமையை போலீஸ்காரர் மிரட்டி வந்ததால் பாதுகாப்புக் கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவுச்செய்து கைது செய்தனர். என்று போலீஸ் சூப்ரிடெண்ட் திவ்யா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here