பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு – பிரியங்கா சோப்ரா

0
210

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை சம்பந்தப்பட்ட நடிகைகள் தற்போது தெரிவித்து வருகிறார்கள்.

பாலியல் தொல்லை குறித்து இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, வெளிநாட்டு டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது கூறிய அவர்….
“ஹாலிவுட்டில் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஒருவர் மட்டுமல்ல, பாலியல் தொந்தரவு கொடுக்கும் பலர் உள்ளனர். இதுபோன்ற பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் இருக்கிறது.
பாலியல் தொல்லை கொடுப்பதற்கு ‘செக்ஸ்’ மட்டும் காரணம் அல்ல. ஒரு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பதாலும் இதை செய்கிறார்கள்.

பல காலமாக பெண்களை குறிவைத்து இது நடக்கிறது. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
வெயின்ஸ்டீன் போல பலர் இருக்கிறார்கள். ஹாலிவுட்டிலும், இந்தியாவிலும் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இதுபோன்றவர்கள் இருக்கிறார்கள். இதன்மூலம் பெண்களிடம் இருந்து அதிகாரத்தை எடுக்க ஆண்கள் முயற்சி செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here