பாம்பு கடித்து தொழிலாளி பலி

0
61

வேலூர்: ஏப்.10
வேலூர் மாவட்டம், அரியூர், ஜி.ஆர்., பாளையத்தை சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு, 56, கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது வீட்டு வாசலில் இருந்த நல்ல பாம்பு திருநாவுக்கரசை கடித்தது. மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here