பல்லாங்குழி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

0
50

பொம்மிடி, ஜூலை, 8
பொம்மிடி அடுத்த, வே.முத்தம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வே.முத்தம்பட்டி பிரதான சாலையில் இருந்து, ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும், மூன்று கிலோ மீட்டர் தார்ச்சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க கோரி, பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here