நேற்று ஜாமீனில் வந்தவர் இன்று படுகொலை

0
7

மங்களூரு, ஜன.13-
மங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு ரவுடி கும்பலுக்கிடையில் நடந்த சண்டையில் ஒரு கொலையில் தொடர்புடையதாக ரவுடி இலியாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சிறையிலிருந்து இலியாஸ் ஜாமீனில் வெளிவந்தார்.

இவரை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்த அதே குணத்தை சேர்ந்த ரவுடி கும்பல் மங்களூரில் இன்று காலை 9மணிக்கு இலியாசை குத்தி கொலை செய்து தப்பியோடினர்.

கொலையான இலியாஸ் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல வழக்குகள் மங்களூரு, உல்லாஸ் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இலியாஸ் உல்லாலில் டார்கெட் குரூப் என்ற அலுவலகத்தை நடத்தி வந்தார். மங்களூரு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here