நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் கைது

0
31

ராமநாதபுரம்.ஜூலை.17
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here