நீண்ட நாள் நண்பரை மணக்கிறார் நடிகை ஷோபனா?

0
442

திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா, இப்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.
1970-ல் பிறந்த ஷோபனா, 1984-ல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

ரஜினியுடன் சிவா, தளபதி படங்களில் நடித்தார்.
பின்னர் மெல்ல நடிப்பிலிருந்து விலகி அவர், நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த அவர், 2001-ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் நண்பரையே வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஷோபனா தரப்பில் இதுகுறித்து எந்த தகவலுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here