நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வருகிறார் நஸ்ரியா

0
142

நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நாசிம்.
முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து நஸ்ரியாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தன. அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான `ராஜா ராணி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து `நையாண்டி’, `வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தார். இந்நிலையில், மலையாள படஉலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாஷிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நடந்தது. அதுமுதல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த படத்தை மலையாளத்தின் முன்னணி இயக்குநராக வலம் வரும் அஞ்சலி மேனன் இயக்குகிறார். இந்த படத்தில் பார்வதியும் முக்கிய கதாபாத்திரதத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அஞ்சலி மேனன் இயக்கத்தில் `பெங்களூரு டேஸ்’ என்ற மலையாள படத்தில் நஸ்ரியா, பார்வதி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here