நீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா

0
426

‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு ‘கடம்பன்’ படத்தில் கேத்தரின் தெரசா நடித்தார். தற்போது தமிழில் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

பட உலகில் நுழைந்தபோது ‘நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். உடை அணிவதில் கட்டுப்பாட்டை மீற மாட்டேன்’ என்று கூறிய கேத்தரின் தெரசா இப்போது தெலுங்கு படங்களுக்காக தனது கொள்கையை தளர்த்தி வருகிறார்.

தற்போது தெலுங்கில் வெளியாகி இருக்கும் ‘காதம் நந்தா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்து இருக்கிறார். கோபிசந்த் கதாநாயகனாக நடித்துள்ள இதில் ஹன்சிகாவும் ஒரு நாயகியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான கவர்ச்சி வேடத்தில் இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா, நீச்சல் உடையில் வரும் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான வேடங்களில் நடிக்க கேத்தரின் தெரசா முடிவு செய்து இருக்கிறார். அதற்கு பொருத்தமான கதைகளை கேட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here