நில ஆவணம்: ஆதார் கட்டாயம்

0
74

புதுடில்லி, ஜூன் 19-
வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ள மத்திய அரசு, நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறியுள்ளது. இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பினாமிகள் சொத்துக்கள் குவிப்பதை தடுக்க, நில உரிமையாளரின் ஆதார் எண்ணை, நில ஆவணங்களுடன் இணைப்பது சரியான செயல் என மத்திய அரசு கருதுகிறது.

இதன் மூலம் நில ஆவண பதிவில் வெளிப்படைதன்மையை கொண்டு வர முடியும். நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, அதனுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், வங்கி கடன் வாங்குவது எளிது, பயிர் காப்பீடு செய்வதும் எளிது எனவும் கருதப்படுகிறது.

மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ‘ 1950ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும் அது விவசாய நிலம் அல்லது விவசாய பயன்பாடு இல்லாத நிலம், வீடுகள் என எதுவாக இருந்தாலும், ஆக., 14ம் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.

அத்துடன் நில ஆவணங்களுடன், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற( தடுப்பு) திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாக கருதப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here