நயன்தாரா ரகசிய திருமணமா?

0
183

நயன்தாரா தற்போது பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘அறம்’ விரைவில் திரைக்கு வருகிறது. ‘இமைக்கா நொடிகள்’, ‘வேலைக்காரன்’ ‘கொலையுதிர் காலம்’, ‘கோகோ’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வலம் வருகின்றன. தெலுங்கு, மலையாள பட உலகிலும் இதுபற்றி பேசப்படுகிறது.

இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் சேர்ந்து வாழ்கிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த தினத்தை நயன்தாரா அமெரிக்காவுக்கு சென்று அவருடன் கொண்டாடினார்.

அந்த புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருவரும் மகிழ்ந்தனர்.
கடந்த 2 வருடங்களாகவே இவர்களுடைய நெருக்கம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும், இதுபற்றி நயன்தாரா கண்டு கொள்வதே இல்லை. காதலிக்கவில்லை என்று இருவரும் மறுத்ததும் இல்லை. கல்யாண வதந்திகள் வந்தாலும், எதுவும் சொல்வதும் இல்லை.

நயன்தாரா வழக்கம்போல் படப்பிடிப்புக்கு செல்கிறார். இயக்குனர்கள் சொல்வதற்குள் புரிந்து கொண்டு நடிக்கிறார். உடன் நடிப்பவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறார். தன்னைப்பற்றி யார் எதை சொன்னாலும் கவலைப்படுவதே இல்லை. இப்போது உலா வருவதும் வதந்தி தான். இதில் உண்மை இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here