நண்பனை கொன்ற நண்பர்கள்

0
15

பெங்களூரு, பிப். 13-
பெங்களூருவில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
பெங்களூரு ஆர்எம்சி வார்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட சஞ்சய்காந்தி காலனியை சேர்ந்தவர் 28 வயது மணிகண்டன் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் மணிகண்டனின் நண்பர்களான விஜய் மற்றும் பில்லு ஆகியோர் அவரது வீட்டருகே சென்று மணிகண்டனிடம் தகராறு செய்து ஆத்திரமடைந்த நிலையில் நண்பர்கள் 2 பேரும் மணிகண்டனை கத்தியால் வயிற்றில் குத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த மணிகண்டனின் உடலை பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 2 நண்பர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here