நடிக்கக் கூடாது என்று இருந்த என்னை மீண்டும் நடிக்க வைத்த படம்: ப்ரியா ஆனந்த்

0
243

அசோக் செல்வன் – ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கூட்டத்தில் ஒருத்தன்’. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நாயகன் அசோக் செல்வன், நாயகி ப்ரியா ஆனந்த், இயக்குநர் ஞானவேல், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் பிரமோத், கலை இயக்குநர் கதிர், சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ப்ரியா ஆனந்த் பேசிய பேசியதாவது,
நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன், இனி எந்த படத்திலும் நடிக்க கூடாது என்பது போல் என்னுடைய மனநிலை இருந்தது. `கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

அவ்வளவு பாஸிடிவான கதை இது. மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். நிவாஸ்.கே.பிரசன்னா தான் படத்துக்கு இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிகசிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here