நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலை

0
98

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ புகழ் மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி அந்த தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் பெயர் முன் மைனா’ புகழ் ஒட்டிக்கொள்ள மைனா நந்தினியானார்.

தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். தற்போது ஜீ தமிழில் குழந்தைகள் நிகழ்ச்சி, டார்லிங் டார்லிங் தொடர் என பிஸியாக இருக்கிறார்.

வம்சம்’, கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிகை நந்தினி நடித்துள்ளார்.
நந்தினி, கார்த்திக்கிகேயன் என்பவரை கடந்தாண்டு ஜூன் மாதம், காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகேயன், சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளார், ஜிம் மாஸ்டராகவும் உள்ளார். இவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.

கார்த்திகேயன் நேற்று இரவு விருகம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி ஓராண்டுகள் ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை கலைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. நடிகர் சாய் பிரசாந்த், நடிகை சபர்ணா ஆகியோ கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here