நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” – நடிகை நமீதா வேதனை

0
270

நடிகை நமீதா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு-
ராகவும், குழந்தைக்கு சிறந்த தந்தையாகவும் இருப்பார் என்ற உணர்வு ஏற்பட்டால் அவரை திருமணம் செய்து கொள்ளலாம். நடிகர் வீராவை பார்த்தபோது எனக்கு அப்படித்தான் ஏற்பட்டது.
ஒளிவுமறைவு இல்லாமல் பேசினார். எனது ஆத்மாவும் அவரது ஆத்மாவும் இணைந்த மாதிரி இருந்தது. காதலையும் நிலா வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து என்னிடம் அழகாக வெளிப்படுத்தினார். அதன்பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். எனது பெற்றோர்கள் வீரா நல்லவர் என்று உனக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக திருமணம் செய்து கொள் என்றனர்.

உறவினர்கள் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்தது. கதாநாயகிகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பெருமையாகவும் பேசுகிறார்கள். சமூகத்தில் மரியாதையும் உள்ளது. ஆனால் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள். இது வேதனை அளிப்பதாக உள்ளது. செய்யும் தொழிலை வைத்து யாரையும் முடிவு செய்யக்கூடாது.

என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வீரா தெரிவித்ததும் முதலில் எனக்கு யோசனையாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர் என்னை சந்தித்த உடனேயே காதலை சொல்லவில்லை. ஒரு வருடம் பழகி என்னைப்பற்றி முழுமையாக தெரிந்த பிறகுதான் காதலை வெளிப்படுத்தினார். என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மூக்கில் அலர்ஜி ஏற்பட்டு ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. உடற்பயிற்சிகள் செய்ய முடியவில்லை. இதனால் உடல் எடை கூடியது. திருமணத்தின்போது உடல் பருமனாகி விட்டதே என்று வருந்தினேன். இப்போது உடற்பயிற்சி செய்து 4 கிலோ குறைத்து இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று எனது கணவர் தடை விதிக்கவில்லை. எனவே தொடர்ந்து நடிப்பேன்.
இவ்வாறு நமீதா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here