தேனீக்கள் கொட்டியதில் 29 பேர் காயம்

0
33

ஓசூர்: ஜன, 10
தேன்கனிக்கோட்டை அருகே, தேனீக்கள் கொட்டியதில், 17 பெண்கள் உட்பட, 29 பேர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூர் பகுதியில், தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை, வழக்கம் போல் ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது, கார்மென்ட்ஸ் நிறுவனம் எதிரே உள்ள புளியமரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து, வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை கொட்டின.
இதில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ரேவதி, 26, உட்பட, 17 பெண்கள் மற்றும், 12 ஆண்கள் காயமடைந்தனர். அவர்களை மீட்ட நிர்வாகம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here