தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மாணவர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்: கலெக்டர்

0
51

கிருஷ்ணகிரி: மே.25
மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில், கல்வி பயின்ற பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில், 22 சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இத்திட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள், இரண்டு ஆண்டுகளுக்கு பின், பொதுப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு பொதுப்பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகள், இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வில், 30 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தீர்த்தம் சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் கார்த்திக், 1,071, வெங்கடேஷ், 1,067, சுமலதா, 1,056 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், இந்த கல்வி ஆண்டில், சிறப்பு மையங்களில் படித்து, பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில், ஐந்து மாணவ, மாணவியர் 1,000க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்துள்ளனர். மேலும், பத்தாம் வகுப்பில், 30 பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அஞ்செட்டி சிறப்பு மையத்தில் படித்த மாணவன் விஸ்வநாதன், 474, குருபரப்பள்ளி மையத்தில் படித்த ஸ்வேதா, 470, தேன்கனிக்கோட்டை மையத்தில் படித்த மாணவி கலைவாணி, 460 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில், பத்து மாணவ, மாணவியர், 400க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here