தெருவோர கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல்

0
43
eating bajji

ராய்ச்சூர், பிப். 12-
ராய்ச்சூரில் இன்று தேர்தல் பிரச்சார யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி வழியில் ஒரு சாலையோர சிறிய பஜ்ஜி கடை முன்பு தனது பஸ்சை நிறுத்த சொன்னார். உடனடியாக இறங்கிய அவர் அந்த கடைக்குள் சென்றார். அவருடன் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர்.

அந்த சிறிய கடையில் இருந்த நாற்காலியில் அனைவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர். அப்போது ராகுல்காந்தி பஜ்ஜிக்கு ஆர்டர் செய்தார். உடனடியாக ஒரு பெரிய தட்டில் சுடச்சுட பஜ்ஜி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அதை எடுத்து ருசி பார்த்த அவர் ஆஹா என்ன அருமை சுவையாக உள்ளது என்று பாராட்டினார். மேலும் ஒவ்வொரு பஜ்ஜியாக எடுத்து முதலில் சித்தராமையாவுக்கு ஒரு பஜ்ஜியும், பரமேஸ்வருக்கு ஒரு பஜ்ஜியும் அவர் கையாலேயே வழங்கினார். அதை அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். அப்போது சுடச்சுட டீயும் வந்தது. அதை பருகிவிட்டு மீண்டும் பிரச்சார யாத்திரைக்கு புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here