துப்பறிவாளன்’ படத்தின் சண்டை காட்சியில் தவறி விழுந்த விஷால் காயம்

0
249

நடிகர் விஷால் ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மிஷ்கின் இயக்கும் இதன் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் பெப்சி தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போதும் இதன் படப்பிடிப்பு தடைபடாமல் நடந்தது.
இன்று, விஷால் எதிரிகளுடன் மோதுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் விஷால் நடித்துக் கொண்டிருந்தார்.

விஷால் எதிரியை பாய்ந்து தாக்குவது போன்ற காட்சி படமானது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார்.
இதில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. உடனே டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மருத்துவ குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர்.
விஷாலுக்கு லேசான காயம் தான். பயப்படும்படி எதுவும் இல்லை. சிறிது ஓய்வுக்குப்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here