தீ விபத்தில் கடைகள் எரிந்து நாசம்: எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்

0
47

அரூர்:ஜூன்.13
அரூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு கடைகள் எரிந்து நாசமாயின. இதில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார். அரூர் அடுத்த டி.அம்மாப்பேட்டையில் சென்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள ஓட்டல் கடை, மளிகை கடை, கோழிக்கடை உள்ளிட்ட, ஆறு ஓலை குடிசை கடைகள், நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாயின. பாதிக்கப்பட்டவர்களை, அரூர் எம்.எல்.ஏ., முருகன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here