திருவண்ணாமலையில் மகாசிவராத்திரி விழா

0
133

திருவண்ணாமலை, பிப். 8-
திருவண்ணாமலையில் உள்ள புகழ்மிக்க அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி கோலாகலமாக நடைபெறுகிறது.
சிவராத்திரிகளில் 5 வகை சிவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது மகாசிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது இதில் மகாசிவராத்திரி மகத்தான சிவராத்திரி மட்டுமல்ல சிவபெருமான் உமையாள் இருவருக்கும் இடையில் சிறப்பு சிவராத்திரியாகும்.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 13-ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோயிலில் சிறப்புப்பூஜைகள் நடைபெறுகிறது பின்னர் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்சதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். பிரம்ம தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் தீபங்கள் ஏற்ற பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரி இரவில் 4 காலபூஜை நடைபெறுகிறது மேலும் மகாசிவராத்திரி உருவான கோயில் என்பதால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னிசை கச்சேரிகள் தேவாரம் பாடுதல் பரதநாட்டியம் 108 தவில் நாதஸ்வரம் கலைஞர்களின் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் பக்தர்களுக்கான அனைத்து தேவைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here