திருப்பதியில் தங்கம் வெள்ளி தாமிர டாலர் விற்பனை

0
181

திருப்பதி, ஏப்.18-
மக்கள் அனைவரும் மனநிறைவுடனும் வளமுடனும் வாழ்ந்திட அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி பொருட்களை வாங்கிட வழிவகுத்து திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளி தங்கம் மற்றும் தாமிர டாலர்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலை மலையப்பன் கோயிலில் தங்கம் வெள்ளி டாலர்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி அட்சயதிருதி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் தங்கம் வெள்ளி உள்ளிட்டவைகளில் உருவாக்கப்படும் ஆபரணங்களை வாங்கினால் வாழ்வில் சுபிட்சம் கிடைக்கும். அஷ்டலட்சுமிகளில் ஒருவரான தனலட்சுமியின் அருளாசி கிடைத்திடும் என்பது காலம் காலமாக நம்பிக்கைக்கு உட்பட்டவர்களாக பொது மக்கள் உள்ளனர்.

இவர்களது எண்ணங்கள் நிறைவேறிட திருமலை மலையப்பன் கோயிலில் பக்தர்களின் கோரிக்கை மற்றும் நலம் வளம் கருதி தங்கம் வெள்ளி தாமிரடாலர்களை விற்பனை செய்து வருகிறது. அவரவர் விருப்பம் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ற அளவில் டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here