தர்மபுரியில் கன மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

0
81

தர்மபுரி: ஏப். 21-
தர்மபுரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், ஏப்ரல் துவக்கத்தில் இருந்து வெயிலின் அளவு, 39 டிகிரி செல்சியசுக்கு மேல் கொளுத்தி வந்த நிலையில் கடந்த, 18ல், 41 செல்சியஸ் பதிவானதுடன், அன்று வெப்பக் காற்று அதிகரித்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று காலை வெயில் உக்கிரத்துடன் காணப்பட்ட போதும், மதியம், 2:00 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:15 மணிக்கு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. தர்மபுரி உட்பட பல்வேறு பகுதிகளில், இருள் சூழ்ந்து காணப்பட்டதால், சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி சென்றன. மாலை, 5:20 மணி வரை பெய்த மழையால் தர்மபுரியில் தாழ்வான பகுதிகளில், மழை நீர் ஆறு போல் ஓடியது. தர்மபுரி சுற்றியுள்ள பகுதிகளிலும், ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கோடை உழவு செய்து, நிலத்தை தயார் நிலையில் வைத்திருந்த விவசாயிகள், சித்திரை பட்ட சாகுபடியை துவங்க முடியும் என, மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here