தருமபுரி ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பரபரப்பு

0
83

தருமபுரி, ஏப்.20
தருமபுரி மாவட்டம் இல்க்கியம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட விருப்பாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகு(40). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தீவணப்புல் பயிர் செய்துள்ளார்.அதில் கால்நடைகளை கட்டி மேயவிடுவது வழக்கம். இன்று காலையும் அது போல் கால்நடைகளை கட்டி விட்டு திரும்பும் போது சிறுத்தை புலி ஒன்று ஓடுவதை கண்டு ரகு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கால்நடைகளை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டி விட்டு பார்க்கும் போது சிறுத்தை அருகிலுள்ள புதருக்குள் ஓடி மறைந்துள்ளது. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பதுங்கியுள்ள சிறுத்தைபுலியை தேடி வருகின்றனர்.
தருமபுரி அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here