தயாரிப்பில் களமிறங்கிய நீலிமா

0
88

தேவர் மகன்’ படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘முரண்’, ‘திமிரு’, ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’, ‘மொழி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மன்னர் வகையறா’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.
தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம், பிரபல தனியார் தமிழ் தொலைகாட்சிக்காக “நிறம் மாறாத பூக்கள்” என்ற நெடுந்தொடரை தயாரிக்கிறது.

இதில் முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.. எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம் என்கிறார்கள் இசைவாணன் – நீலிமா இசைவாணன் இருவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here