தயாரிப்பாளர் ஆனார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்

0
333

அறிமுக நாயகன் அகில் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ‘சதுரங்கவேட்டை’ நடிகை இஷாரா நாயர், ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகிய நான்கு பேர் இந்த படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் விஜய், அஜித் உள்பட பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜேந்திரன் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். நிஜத்தில் அல்ல, அவர் நடிக்கும் அடுத்த படமான “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா“ என்ற படத்தில் தயாரிப்பாளர் கேரக்டரில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கவுள்ளார்.

ரஹிம்பாபு ஒளிப்பதிவில், வர்ஷன் இசையில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை கெவின் இயக்குகிறார்.
இந்த படம் குறித்து இயக்குனர் கெவின் கூறியபோது, ‘தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் கதாப்பாத்திரத்தில் நாயகன் அகில் நடிக்கின்றார்.

அதே ஊரில் பண்ணையாராக இருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அவரிடம் நடந்ததை சொல்கிறான் சஞ்சய். அவனது திறமையையும், அவனது வருத்தத்தையும் புரிந்து கொண்ட ராஜேந்திரன் நானே உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று தனது சொத்துக்களை விற்று படம் தயாரிக்கிறார்.

சினிமா எப்பவும் ஒரே மாதியே இருக்காது. சினிமாவில் இழந்தவர்களும் அதிகம், வாழ்ந்தவர்களும் அதிகம். அப்படிப்பட்ட சினிமாவில் நாயகன் அகிலும் தயாரிப்பாளர் ராஜேந்திரனும் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை என்று கூறிய இயக்குனர் கெவின் இந்த படத்தின் படப்பிடிப்பு மாயவரம், கும்பகோணம், சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here