தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை

0
84

கொளத்தூர்: ஏப். 20-
இரு ஆம்புலன்ஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், டிரைவர் பலியானார். மற்றொரு டிரைவர் காயம் அடைந்தார்.
சேலம் மாவட்டம், கொளத்தூர் அடுத்த, பாலாறு வனப்பகுதியில், நேற்று மதியம், 1:00 மணியளவில், பைக்கில் மூன்று பேர், மேட்டூர் நோக்கி வந்தனர். மேட்டூரில் இருந்து, மாதேஸ்வரன் மலை நோக்கிச் சென்ற கார், பைக் மீது மோதியது. அதில், பைக்கில் சென்ற மூவரும் காயம் அடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும், கொளத்தூரில் இருந்து, இரு தனியார் ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்தன. ஒரு ஆம்புலன்ஸில் இருவர், ஸ்ரீவாரி எனும் மற்றொரு தனியார் ஆம்புலன்ஸில் ஒருவரும் ஏற்றப்பட்டனர். இரு ஆம்புலன்ஸ் வாகனமும் மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தன. அப்போது, கொளத்தூரில் இருந்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்துக்கு, வேகமாக வந்தது. சம்பவ இடத்தில் இருந்து, 100 அடி தூரத்தில், ஸ்ரீவாரி தனியார் ஆம்புலன்ஸ்சும், 108 அவசரகால ஆம்புலன்ஸ்சும் நேருக்கு நேர் மோதின. அதில், தனியார் ஆம்புலன்ஸ்சில் இருந்த, காயம் அடைந்தவர் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். மேலும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான, மேச்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த காசி மகன் தினேஷ், 23, சம்பவ இடத்தில் பலியானார். மேலும், 108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவரான, கருங்கல்லூரை சேர்ந்த வேலுமணி லேசான காயத்துடன் தப்பினார். கொளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here