தனது நீண்டநாள் ஆசையை சூர்யா படத்தின் மூலம் நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்

0
39

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள `தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். இதில் `தானா சேர்ந்த கூட்டம்’ படம் மற்றும் அதில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது,
`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் காமெடி கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே, எனக்கு கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.

பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா, சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது, நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன், ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார்.
செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் கரடி பொம்மைப் போல கியூட் ஆனா மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும்.

பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும். அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here