டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்

0
88

தனுஷ் நடித்த முதல் இந்தி படத்தில் அவருடைய தோழியாக நடித்தவர் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். தற்போது ‘வீர் தி வெட்டிங்’ படத்தில் நடித்து வருகிறார். தனது பட அனுபவம் பற்றி கூறிய ஸ்வரா இப்படி சொல்கிறார்….

“நான் புதிதாக நடிக்க வந்தபோது, அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரு இயக்குனர் எனக்கு தொந்தரவு கொடுத்தார். இரவும், பகலும் என்னை தொடர்ந்தார். காட்சி பற்றி பேச வேண்டும் என்று ஓட்டல் அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது குடிபோதையில் இருந்தார்.

படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரத்திலேயே காதல் பற்றியும், செக்ஸ் குறித்தும் ஒருநாள் இரவு சேர்ந்து இருப்பது பற்றியும் என்னிடம் பேசத் தொங்கினார். குடித்துவிட்டு என் அறைக்கு வந்து அவரை கட்டிப்பிடிக்கும்படி தொந்தரவு செய்தார். அவருக்கு பயந்து மேக்கப் போட்டதும் என் அறை விளக்குகளை அனைத்துவிடுவேன். இருட்டிலேயே மேக்கப் கலைப்பேன். அவர் வந்துவிடுவாரோ என்ற பயம் தான் அதற்குகாரணம்.

படத்தின் நிர்வாக தயாரிப்பாளரிடம் இதுபற்றி புகார் செய்தேன். 2 வாரம் தொந்தரவு இல்லை. மீண்டும் பழைய கதையை தொடங்கினார். படவாய்ப்பு பற்றி கவலைப்படக்கூடாது. போனால் போகட்டும். ஆனால் தவறான தொடர்புக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பது எனது அறிவுரை”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here