டெங்கு காய்ச்சலுக்கு 4ம் வகுப்பு மாணவி பலி

0
36

காடையாம்பட்டி: ஆகஸ்ட், 4
டெங்கு காய்ச்சலுக்கு, நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். ஓமலூர் அருகே, கஞ்சநாயக்கன்பட்டி, கோவிந்தகவுண்டனூரில் வசிப்பவர் மூர்த்தி, 30; கொத்தனார். இவரது மனைவி விஜயலட்சுமி, 25. இவர்களுக்கு ஸ்ரீவித்யா, 9, கோபிகா, 7, சுசீந்தர், 3, என, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீவித்யாவுக்கு, கடந்த, 28ல், காய்ச்சல் ஏற்பட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு, அவர் உயிரிழந்தார். இதையடுத்து, காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங் தலைமையில் மருத்துவ குழுவினர், கோவிந்தகவுண்டனூரில் ஆய்வு நடத்தினர். அப்போது, நோய் தடுப்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here