டிசம்பரில் அஞ்சலி – ஜெய்க்கு திருப்பதியில் திருமணம்

0
351

நடிகை அஞ்சலி, 2007-ம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘அங்காடி தெரு’ படம் அவரை பிரபலபடுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன் மாப்ள சிங்கம், இறைவி ஆகியவையும் முக்கிய படங்களாக அமைந்தன.
தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

குடும்ப பிரச்சினையால் சினிமாவை விட்டு தற்காலிகமாக சில மாதங்கள் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவரது மார்க்கெட் சரியவில்லை. கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். அஞ்சலிக்கு 31 வயது ஆகிறது. அவருக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் அஞ்சலிக்கும் நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அஞ்சலிக்கு ஜெய் தனது வீட்டில் தோசை சுட்டு கொடுத்தும் நெருக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு ஜெய் டுவிட்டரில் தெரிவித்து இருந்த வாழ்த்து செய்தியில், “நீ எனக்கு முக்கியம். நீ நீயாக இருந்து எனது ஒவ்வொரு நாளையும் முக்கியமானதாய் ஆக்குகிறாய். நானும் கடவுளும் என்றும் உன்னுடன் இருப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அஞ்சலி நன்றி தெரிவித்தார்.

அஞ்சலி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த தெலுங்கு பெண் ஆவார். “அஞ்சலிக்கும், ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்று அஞ்சலியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here