டாக்டர்கள் வேலை நிறுத்தம்: 3 நோயாளிகள் பலி

0
50
2nd day protest by doctors at belgam

பெங்களூரு, நவ. 14-
டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக சிகிச்சை அளிக்காததால் நோயாளிகள் நேற்று மூன்று பேர் பலியானார்கள்.
கர்நாடக அரசின் தனியார் கிளினிக்குகள் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் அத்துடன் பெல்காமில் சுவர்ண சவுதா சலோ போராட்டம் நடத்தினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவால் பாகல்கோட்டில் உயிருக்கு போராடிய 3 நோயாளிகள் சிகிச்சைக்கு பலனின்றி பலியானார்கள்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுடன் முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். ஆனால் அவரது கருத்தை டாக்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.

பெல்காமில் 8 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதனால் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டது. பாகல்கோட், பாதமி கெரூர் நகரின் உசேன் சாருகஸ்தி – 53, முத்தலகேரி மல்லப்பா நிரலகேரி – 68, முதோள் மகாலிங்கபுரா சுனந்தா – 50 ஆகிய 3 பேர் உயிர் இழந்தனர்.

இந்த 3 பேருமே இருதய நோய் தாக்கப்பட்டு பலியானார்கள் இதற்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததே காரணமென தெரியவந்துள்ளது.
புதியதாக கொண்டு வரப்படுகிற சட்டமசோதாவில் டாக்டர்களுக்கு பாதிப்பு வராத வகையில் திருத்தம் செய்யப்படும். மறுபடியும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டாக்டர்களிடம் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here