சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

0
28
Ramakrishna Mutt (Ulsoor) organised Mutt president Thathwarupananda Swamiji, CRISP President Kumar Jahgirdar, RBANMS First grade College Principal Dr M Jayappa along with students celebrating and peace rally of "National Youth Day" on the occasion of Swami Vivekananda Birth anniversary at Ulsoor in Bengaluru on Friday.

பெங்களூரு, ஜன. 12-
பெங்களூரு அலசூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் அனுசரிக்கப்பட்டது. ராமகிருஷ்ணர் மட தலைவர் சுவாமி தத்வரூபானந்தா கிரிஸ்ப் தலைவர் குமார் வி.ஜாகிந்தர் ஆர்பிஎன்எம்எஸ் கல்லூரி முதல்வர் ஜெயப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இது குறித்து குமார் வி.ஜாகிந்தர் கூறியதாவது-

“சுவாமி விவேகானந்தர் இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் அவர் கண்ட கனவை நனவாக்க வேண்டியது அனைத்து இந்தியர்களின் கடமை ஆகும். நமக்கும் நாட்டு பற்று அவசியம் முதலில் நாடு மற்றவை எல்லாம் பிறகு தான் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..?
என்ற உண்மையை உணர்ந்து நம் நாட்டை போற்றுவோம் இளைஞர் சக்தியை ஊக்குவிப்போம் இவ்வாறு குமார் ஜாகிந்தர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here