சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: மரியான் நடிகை பார்வதி

0
453

தனுஷின் மரியான், பூ, பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்தவர் பார்வதி. சினிமா துறையில் வழக்கமாக நடிகைகளை எப்படி நடத்துவார்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மை என பார்வதி கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில், “பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைப்பார்கள். மலையாள சினிமாவில் நான் இதை பல முறை சந்தித்துள்ளேன். பல சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் நேரடியாகவே கேட்பார்கள். சினிமா என்றால் அப்படி தான் இருக்கும் என சிலர் ப்ஃரீஅட்வைஸ் செய்து என்னை அழைப்பார்கள்.”
“அப்படி பட்டவர்களின் படங்களை நான் நிராகரித்துள்ளேன். அப்படி செய்துதான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது வேண்டாம். நடிப்பதை தவிர வேறு வேலை செய்யமுடியாதா என்ன?. அதிக வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததற்கு அதுதான் காரணம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “நான் எதையும் சர்ச்சையாக பேசவில்லை, அனைவருக்கும் இது தெரிந்த விஷயம் தான்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here