சிறுமியை கடத்திய வாலிபர் கைது

0
48

அரூர்: ஏப்.3
அரூர் அடுத்த எட்டிப்பட்டியை சேர்ந்தவர் துரை, 43. இவரது, 17 வயது மகள், அரூரில் உள்ள டிபார்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வந்தார். கடந்த, 17ல் வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை. இது குறித்து துரை அளித்த புகாரின்படி, அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமியை கடத்தி சென்ற பொம்மிடியை சேர்ந்த சிபிசக்கரவர்த்தி, 21, என்ற வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாணவி மாயம்: அரூர் சந்தைமேட்டை சேர்ந்தவர் கணேசன், 45. இவரது, 17 வயது மகள், அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ், 2 படித்து வந்தார். கடந்த, 31ல் தேர்வு முடிந்த நிலையில், மாணவியை காணவில்லை. இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்படி, அரூர் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here