சாகித்ய அகடாமி தேர்தல் சந்திரசேகர கம்பாரா தேர்வு

0
15

புதுடெல்லி, பிப். 13-
மத்திய சாகித்ய அகாதமிக்கு நடைபெற்ற தலைவர் தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஞானபீட விருதாளர் சந்திரசேகர கம்பாரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியத் தலைநகரில் அமைந்து உள்ள மத்திய சாகித்ய அகாதமியின் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகத்தை சேர்ந்தவரும் ஞானபீட விருது பெற்றவருமான சந்திரசேகர கம்பாரா மற்றும் ஒடிசா மாநில எழுத்தாளர் பிரதிபா ரோயத் போட்டியிட்டவை.

இதில் சந்திரசேகர கம்பாரா 59 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு 29 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
மத்திய சாகித்ய அகாதமி தொடங்கப்பட்டு இதற்கு முன்பாக வி.கே.கோகாக் 1983ம் ஆண்டிலும் யூஆர் அனந்தமூர்த்தி கடந்த 1993ம் ஆண்டிலும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து 3 கன்னட மொழி எழுத்தாளரான சந்திரசேகர கம்பாரா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர கம்பாரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பெற்ற முதல்வர் சித்தராமையா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் முதல்வர் சித்தராமையா கூறியிருப்பதாவது-
சாகித்ய அகாதமியின் தலைவராக சந்திரசேகர கம்பாரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவரது தேர்வு கன்னட இலக்கிய உலகிற்கு கிடைத்த மற்றொரு பெருமிதமாகும்.

அவர் கன்னட இலக்கியங்களை பிற மொழிகளிலும் பிற மொழி இலக்கியங்களை கன்னட மொழியிலும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here