சமந்தா வீட்டை கைப்பற்றிய சாயிஷா

0
373

நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகன் அகில் அறிமுகமான படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. 2015-ல் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை.

இப்போது தமிழில் ‘வனமகன்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக சாயிஷா அறிமுகமாகி இருக்கிறார். அவரது நடிப்பும், நடனமும் பாராட்டு பெற்றுள்ளன. அடுத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் தெலுங்கிலும் மார்க்கெட் பிடிக்கும் ஆர்வத்தில் சாயிஷா ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.

இது சமந்தா ஏற்கனவே குடியிருந்த வீடு. இந்த வீட்டில் தங்கி இருந்த போதுதான் சமந்தா தெலுங்கில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார். தமிழிலும் முன்னணி இடம் வகித்தார். எனவே, இந்த வீடு தனக்கும் அந்த அதிர்ஷ்டத்தை தரும். தமிழ், தெலுங்கில் முன்னணி இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாயிஷா இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here