சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் கைது

0
113

கிருஷ்ணகிரி: பிப்.10
மணல் கடத்தலை தடுத்த, சப்-இன்ஸ்பெக்டரை, லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற டிரைவரை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எஸ்.ஐ., கலைச்செல்வன் மற்றும் போலீசார் அத்திப்பள்ளம் எல்லம்மா கோவில் அருகில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. போலீசாரை கண்டதும், லாரி டிரைவர், எஸ்.ஐ., கலைச்செல்வன் மீது மோதுவது போல் ஓட்டி, தப்பியோட முயன்றார். அவரை, போலீசார் வாகனங்களில் விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் ரமணன், 36, என்றும், மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் என்றும், டிப்பர் லாரியை சொந்தமாக வைத்து ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. அவருடைய லாரியில், மூன்று யூனிட் மணலை, நடுப்பட்டி ஆற்றில் இருந்து கடத்தி கொடமாண்டப்பட்டிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, ரமணனை போலீசார் கைது செய்தனர். மேலும், லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here