சதானந்தா ஷோபா மோதல்

0
33

பெங்களூரு, அக். 12-
மாநில பிஜேபி தேர்தல் பிரச்சாரக்குழு நியமனத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஷோபா கரந்தலஜே ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் வாய்ப்பு உள்ள நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சதானந்த கவுடாவுக்கு அடுத்த இடம் பெற்று இருந்த பாராளுமன்ற உறுப்பினரும் மாநில பிஜேபி தலைவர் எடியூரப்பாவின் நெருங்கிய தோழியுமான ஷோபா கரந்தலஜே இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார்.

மாநில பிஜேபி தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் உடனடியாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை 4வது இடத்திற்கும் ஷோபாவை 3வது இடத்திற்கும் என குழுவை மாற்றி அமைத்து அறிவித்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக தகவல் பெற்ற சதானந்த கவுடா மத்திய அமைச்சராக இருக்கும் தனக்கே இந்த கீழிறக்கமா என்று இதற்கு காரணமாக உள்ள ஷோபா மீது கடும் கோபத்துடன் உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஷோபா தொடர்ச்சி
மாநில பிஜேபி தேர்தல் அமைப்பாளராக இருந்து வந்த சதானந்த கவுடா மீது ஷோபா எழுதிய கடிதத்தையடுத்து மாநில பிஜேபி தலைவர் பிஎஸ்.எடியூரப்பா தேர்தல் பிரச்சாரக்குழுவை உடனடியாக மாற்றி அமைத்து அறிவித்துள்ளார் இவரது அறிவிப்பின்படி சதானந்த கவுடா நீக்கப்பட்டு ஷோபாவை அமைப்பாளராக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here