கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளை பார்வையிட பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு

0
21

கோவை,அக், 12
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளை பார்வையிட பிரேமலதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெங்கு காய்ச்சல்லால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தே.மு.தி.க. சார்பில் உதவிகள் வழங்கப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு பழம், ரொட்டி ஆகியவை வழங்க பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை வந்தார்.
பிரேமலதா வருகையையொட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். இந்த நிலையில் நோயாளிகளை பார்க்க பிரேமலதாவை அனுமதிக்க கூடாது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோக்குமார் உத்தரவிட்டு இருந்தார்.
இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த தே.மு.தி.க.வினர் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் கூறும் போது முறைப்படி நேற்று அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று திடீரென வேண்டும் என்றே அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.
அந்த நேரத்தில் பிரேமலதா அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் சந்தித்து பேசினார். அப்போது ஆஸ்பத்திரிக்கு கூட்டமாக செல்லகூடாது, ஒரு சிலர் மட்டும் தான் செல்ல வேண்டும் என்றார்.
இதையடுத்து பிரேமலதா மற்றும் 4 நிர்வாகிகள் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்தனர். நோயாளிகளிடம் பிரேமலதா நலம் விசாரித்து ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here