கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

0
109

தர்மபுரி: ஏப். 21-
தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள், புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எம்.எஸ்., – எம்.டி., மருத்துவ படிப்பிற்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி மருத்துவமனையில் பணிபுரியும், 250 மருத்துவர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், செயலாளர் டாக்டர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மணிமேகலை தலைமையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க பொருப்பாளர் டாக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில், 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், போராட்டத்தில் பங்கேற்றனர். காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, இரண்டு மணிநேரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், புற நோயாளிகள் இரண்டு மணி நேரம் மருத்துவ வசதியின்றி சிரமம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here