கோடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மருத்துவமனையில் அனுமதி

0
32

கோவை,ஜூன்,20
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சயான், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் கோடநாடு மாளிகைக்குள் புகுந்த கும்பல், ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்துவிட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைவலி காரணமாக 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சயான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறியதை அடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சிறைத்துறை அதிகாரிகள் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிறைக்கைதிகளுக்கான தனிப்பிரிவில் அனுமதித்தனர். இந்த வழக்கில் சயான் கைது செய்யப்பட்டது முதல் இதுவரை சிறையில் அடைக்கப்படாதது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here