கே.ஆர்.எஸ்.அணைக்கு பலத்த பாதுகாப்பு

0
76

மண்டியா, பிப்.14-
தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இந்த பயிர்களை காக்க கர்நாடக காவிரிலியிருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 16 வாகனங்களில் 150 விவசாயிகள் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர், திருச்சி. நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் வந்தனர். ஒசூர் அருகில் ஜூஜூவாடியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் கபினிக்கு சென்று அணையை திறந்து விட வலியுறுத்த திட்டமிட்டிருந்தனர்.

மாதாயி நதி நீர் கர்நாடக கலசா பண்டூரி திட்டத்தின் மூலம் பெல்காம், ஹூப்ளி, தார்வாட் உள்ளிடட 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா சபாநாயகர் அமைச்சர்கள் அதிகாரிகள் பெல்காமுக்கு வந்து பார்வையிட்டனர். இதே போன்று தமிழக விவசாயிகளும் கே.ஆர்.எஸ்.அணைக்கு வந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்த கூடும் என்ற எதிர்பார்ப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணையின் அருகில் செல்லாதவாறு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு எந்த அசம்பாவிதமும் நிகழச் கூடாதென எச்சரிக்கையாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here