கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள் 15 பேர் தீக்குளிக்க முயற்சி

0
107

வேலூர்: ஏப்.18
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கேபிள். ‘டிவி’ ஆபரேட்டர்கள், 15 பேர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன், பொது மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆம்பூரில் இருந்து, 15 கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து, இரண்டு கேன்களில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர், அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பங்குதாரர்கள் காழ்ப்புணர்ச்சியால், கேபிள், ‘டிவி’ சிக்னல்கள் துண்டிக்கப்படுகின்றன. எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. ஆம்பூர் போலீசில் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
* குடியாத்தம், நெல்லூர் பேட்டை கணபதி நெசவாளர் சங்க நிர்வாக இயக்குனர் சேகர், 50, என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் போர்வையை விரித்து தர்ணாவில் ஈடுபட்டார். அதிகாரிகள் 30 நிமிடம் போராடிய பின், தர்ணாவை கைவிட்டார். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: குடியாத்தம் பகுதியில், 30க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் உள்ளன. இதில், பஞ்சுகள் வாங்கி போலி பில் போட்டு, துணி உற்பத்தி செய்து விற்பனை செய்ததாக கணக்கு காட்டி மத்திய, மாநில அரசுகளிடம் மானியம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்கின்றனர். இது குறித்து, மாவட்ட நெசவாளர் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தால், நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here